அமீபா தொற்றால் குழந்தை பலி- நீச்சல் குளங்களுக்கு அதிரடி உத்தரவு
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்று எதிரொலியால் தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்பது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் அமீபா தொற்றால் மூன்று மாத குழந்தை உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், நீச்சல் குளத்தில் நாளொன்றுக்கு 2 முறை தண்ணீரை வெளியேற்றி குளோரின் பவுடர் தெளித்து, சானிடைஸ் செய்ய வேண்டும் என மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். மேலும் நீச்சல் குளம் உரிமையாளர்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மாசடைந்த நீர் நிலைகளை குழந்தைகள் அணுகாமல் பெற்றோர் பாதுகாத்து கொள்ளவும் அறிவுத்தப்பட்டுள்ளது.


