பணமூட்டையோடு திரிபவர்களுக்கு தான் திருடனுக்கு தேள் கொட்டுன மாறி இருக்கும்- டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தடை வரும் என்பார்கள், அது இப்பவும் தொடருகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Tamil Nadu Polls | TTV Dhinakaran is caught between a rock and a hard place

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. சிறுபாண்மையினர் அணி மாநில நிர்வாகி அப்துல்நபில் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், “ஏழை, எளிய மக்கள் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் வைத்திருக்க வாய்ப்பில்லை. அதாவது இந்த செய்தி பணமூட்டையோடு திரியும் பண முதலைகளுக்கு மட்டுமே திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி ஒருவித பயத்தை ஏற்படுத்தும். அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஜெயக்குமார் பேசுவதெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதற்கு ஓபிஎஸ் தகுந்த பதில் அளிப்பார்.

தற்போது கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருதோ அப்போதெல்லாம் மக்களுக்கு விரோதமான செயலில் அவர்கள் ஈடுபடுவார்கள். இது இப்பவும் தொடருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தடை வரும் என்பார்கள், அது இப்பவும் தொடருகிறது. திமுக ஆட்சியில் மக்களுக்கு விரோதமான செயல் நடைபெறுகிறது. விழுப்புரம் பகுதியில் ரவுடிகள், சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என ஒரு வருடத்திற்கு முன்பே நான் நினைவூட்டினேன்” என்றார்.