“திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு எதுவும் இல்லை”- டிடிவி தினகரன்

 
“திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு எதுவும் இல்லை”- டிடிவி தினகரன்

மக்களை ஏமாற்றுகின்ற திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த ஒற்றுமையாக அனைவரும் ஒரே கோஷத்துடன் என்.டி.ஏ கூட்டணியில் ஒருமனதாக இணைந்துள்ளோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ தமிழ்நாட்டில் மக்கள் விரும்பாத ஆட்சியில் போதையால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.மறைக்கப்பட்ட ஊழல்கள் வெளிவருகின்றன. ஏழை மக்களை விலை கொடுத்து வாங்க திமுக முயற்சிக்கிறது. மக்களை ஏமாற்றுகின்ற திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த ஒற்றுமையாக அனைவரும் ஒரே கோஷத்துடன் என்.டி.ஏ கூட்டணியில் ஒருமனதாக இணைந்துள்ளோம். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு எதுவும் இல்லை. அனைத்து தரப்பினரும் போராடும் நிலையில் உள்ளனர். வீரம், விவேகத்துக்கு புகழ் பெற்ற பூமி மதுரை. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனை எல்லோருக்கும்  தெரியும். கடும்கோன் பாண்டியனாக பிரதமர் திகழ்கிறார். சித்திரை திருவிழா போல இந்த மாபெரும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்” என்றார்.