“திமுக கூட்டணியில் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”- டிடிவி தினகரன்

 
v

மாற்றம் வேண்டும் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்கள் பேராபத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள் என முதல்வர் விஜயை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

கந்தர்வக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “மாற்றம் வேண்டும் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்கள் ஒருபேராபத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்கலாம், ஆனால் சட்டம் ஒழுங்கை சரி செய்ய அவகாசம் கேட்கக்கூடாது. ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் உணர வேண்டும். தவெக ஆட்சி தமிழ்நாட்டுக்கு பேராபத்து. திமுக கூட்டணியில் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்.. 108 தொகுதி தானே மக்கள் உங்களுக்கு கொடுத்துருக்காங்க.. ஆட்சியில் இருந்துகொண்டு ரீல்ஸ் ஓட்ட முடியாது. தவெக அரசு தவறான பாதையில் செல்கிறது என்பதை மக்கள் அறிவர்” என்றார்.