"விஜய் ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டிற்கு பேரழிவு"- டிடிவி தினகரன்

 
ttv

தமிழ்நாட்டின் தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் டிடிவி தினகரன் மற்றும் தவெக இடையேயான மோதலுக்கு மத்தியில் சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்ளை சந்தித்தார்.

ஏஐ விடியோவாக இருக்கலாம்! முதல்வராவதற்கே விஜய் ஏமாற்று வேலை! டிடிவி தினகரன்

அப்போது பேசிய டிடிவி தினகரன், “தமிழக வெற்றிக் கழகம் ஆளுநரிடம் வழங்கிய ஆதரவு கடிதம் போலியானது. அமமுக-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ- காமராஜ் போன்றோர் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக வெளியாகும் வீடியோக்கள் மற்றும் பேரம் பேசப்படுவதாக எழும் புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அவரிடம் எங்கே வைத்து கையெழுத்து வாங்கினார்? அதற்கு அத்தாட்சி உள்ளதா? இதற்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். வீடியோவில் உள்ளது காமராஜ் என்பதை உறுதி படுத்தவேண்டும், ஏ.ஐ.பயன்படுத்தி அந்த வீடியோவை உருவாக்கி இருக்கலாம். காமராஜ் இதுவரை விஜய்யை கூட பார்த்ததில்லை, சம்பந்தம் இல்லாமல் எப்படி இவர் அங்கு செல்வார்..?

முக்கியமான அந்த ஒரிஜினல் வீடியோவை ஏன் அவர்களால் காண்பிக்கப்படவி்ல்லை? விஜய் ஆளுநரிடம் அளித்த நகல் கடிதத்தின் ஒரிஜினல்  ஆவணம் எங்கே ? வெள்ளை தாளில் விஜய் எழுதி உள்ளார். என் ஒப்புதலோடு கடிதம் என்று எழுதி என்னை மிரட்ட பார்க்கிறார்கள், எங்கள் கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்க பார்க்கிறார்கள். அந்த அறிவு ஜீவிகள் யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள், விஜய் எங்களுக்கு மாமனா மச்சன்னா நாங்கள் ஏன் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்? அவர்கள் செய்ததை நான் சும்மா விட மாட்டேன், என் ஒப்புதலோடு என்று பொய் கடிதம் வழங்கி உள்ளனர். விஜய் போன்று ஓடி ஒளிந்தவர்கள் நாங்கள் இல்லை. விஜய் தான் இதற்கு பின்னால் முழுவதுமாக உள்ளார். குதிரை பேரம் செய்ய தான் கடிதம் வழங்கி உள்ளார்கள். உண்மையான கடிதம் எங்கு உள்ளது, விஜய் ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டுக்கு பேர் அழிவு ஏற்படும். எம்.எல்.ஏ வை விலைக்கு வாங்க விஜய் போர்ஜரி கடிதம் வழங்கி உள்ளார். தேவ தூதரான விஜய்க்கு நாம் அறிவுரை வழங்க முடியுமா? ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படி உள்ளீர்கள் என்றால் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது என்ற அறிவுறுத்தலை தான் விஜய்க்கு சொல்ல முடியும். ஆளுநரிடம் கொடுத்த உண்மை கடிதத்தை விஜய் வெளியிட  வேண்டும்” என்றார்.