“குக்கர் சின்னத்தில் போட்டி! நாங்கள் கேட்டதில் 99.5% தொகுதி கிடைத்துள்ளது” - டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க நாங்கள் கூட்டாக சேர்ந்து உழைப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க நாங்கள் கூட்டாக சேர்ந்து உழைப்போம். அமமுக 11 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டி. NDA கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதிகள் என்பதும் முடிவாகிவிட்டது.. விரைவில் அறிவிப்பு வெளியாகும். திமுக அரசு மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும். தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடித்துக் கொடுத்த மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு நன்றி. நாங்கள் கேட்டதில் 99.5% தொகுதி கிடைத்துள்ளது” என்றார்.