“கூட்டணியில் இணைய எந்த அச்சுறுத்தல்களோ, அழுத்தமோ இல்லை”- டிடிவி தினகரன்

 
அஎ அஎ

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “நாங்கள் இணைந்ததை திமுக விமர்சிக்கும் ஆனால் 2016 - 2021 ஆம் காலக்கடத்தில் திமுக எதிர்கட்சியாக இருந்த போது எதற்கு எல்லாம் போராடினார்களோ எதை எல்லாம் தேர்தல் அறிக்கையில் கொடுத்தார்களோ அதனை எல்லாம் நிறைவேற்றவில்லை. எங்களுக்குள் இருந்தது குடும்ப பிரச்சனை. இது கூட்டு குடும்ப பிரச்சனை, எங்களுக்குள் பிரிவு இருந்தது, மனஸ்தாபம் இருந்தது. ஆனால் அது சரியானது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலே நாங்கள் கூட்டணியில் இணைய வேண்டியது, ஆனால் அப்போது நடக்கவில்லை. 

பிரதமர் மோடி அவர்கள் நீங்களும் அண்ணன் இபிஎஸ் இணைய வேண்டும் என கூறினார். அவரும் ஒப்புதல் அளித்த பிறகு தான் அழைத்து பேசினார்கள். கூட்டணியில் இணைய எந்த விதமான அச்சுறுத்தல்களோ, அழுத்தமோ இல்லை. நாங்கள் அண்ணன், தம்பியாக உள்ளோம். நாங்கள் ஒன்றிணைந்து விட்டோம். நாங்கள் எப்போது பார்த்தோமா பார்த்த உடன் சேர்த்து விட்டோம். இந்த திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வேண்டும். தமிழகத்தின் தேவையை மத்திய அரசு நினைவேற்றி தரும்” என்றார்.