“பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணியில் இணைய முடியாது”- டிடிவி தினகரன்
Dec 28, 2025, 16:28 IST1766919531284
உங்கள் பார்வை திமுக பக்கம் திரும்புமா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், ஒன்றிணைந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமாகும். கூட்டணி நிலைப்பாடு குறித்து யாரும் எங்களுக்கு அழுத்தம் தரவில்லை. கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.. காலம் பதில் சொல்லும். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே, கூட்டணி குறித்து அறிவிப்பேன். பல கட்சிகள் அமமுகவை கூட்டணிக்கு அழைத்து வருகிறது. பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைய முடியாது” என்றார்.


