“எடப்பாடியை முதலமைச்சர் ஆக்குவோம் என்ற நயினாரின் விருப்பம் நிறைவேறாது” - டிடிவி தினகரன்

 
ச் ச்

அதிமுக என்ற கட்சியை எடப்பாடி பழனிச்சாமி இழுத்து மூடிவிட்டு எடப்பாடி திமுக என மாற்றி கட்சி நடத்தி வருவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

ttv


சோளிங்கர் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் ஆனது நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று அறிவுரைகளை வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “அதிமுக இயக்கத்தை எம்ஜிஆர் உருவாக்கினார். ஆனால் அதை முழுமையாக மூடிவிட்டு எடப்பாடி அதிமுக என கட்சி செயல்படுகிறது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எத்தனை அடிமைகள் ஒன்றிணைந்து வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து வந்து ஆட்சியை பிடித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் இது பற்றி கூறுவதற்கு தகுதியற்றவர்.

தமிழகத்தில் பாஜக ஆட்சி பிடிக்க முடியாத காரணத்தினால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் வழங்குகிறது. பாஜகவினர் ஆட்சி அமைய பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றனர். ஆனால் அதனை முறையாக ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வகையில் வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் கடன் சுமை குறையும். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் உங்கள் முன்னேற்ற கழக கூட்டணி இடம்பெறும் அணி நிச்சயம் வெற்றி பெறும். சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் என் ஜி பார்த்திபன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் அம்மாவின் ஆசிர்வாதத்தோடு வெற்றி பெறுவார். கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்கு யார் காரணம் என்பதை குறித்து சிபிஐ விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வரும். கரூர் துயர சம்பவத்தில் எந்தவிதமான சூழ்ச்சிகளும் இடம்பெறவில்லை. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையும் என கனவு காண்கிறார். அது நிச்சயம் பலிக்காது” என்றார்.