“தவெக அதிமுக கூட்டணி வந்துவிடும் என ஈபிஎஸ் கனவு காண்கிறார்”- டிடிவி தினகரன்
தவெகவுக்கு ஆதரவாக பேசினால் அக்கட்சி கூட்டணிக்கு வந்துவிடும் என கனவு காண்கின்றார் எடப்பாடி பழனிசாமி என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பில் திருப்போரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “இந்தியாவில் ஒருவர் துரோகம் செய்து உயர்ந்து விட முடியாது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வர விடாமல் 2021 ஆம் ஆண்டு அமுமுக தடுத்தது. 2019 ஆம் தேர்தலிலும், 2021 ஆம் தேர்தலிலும், 2024 ஆம் தேர்தலில் அதிமுக படு தோல்லி அடைந்தது. துரோகத்தை வீழ்த்த 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு நல்ல கூட்டணி உள்ளோம். நம் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்போரூர் சட்டமன்ற தேர்தலில் கோதண்டபாணி தேர்தலில் போட்டியிடுவார். அவர் ஜெயலலிதா வேட்பாளராக அறிவித்து வெற்றி பெற வைத்தவர்.
அதிமுக பெரிய கட்சி இல்லை என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார். தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரும் என கனவு காண்கிறார். விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்லலாம் என எடப்பாடி ஏற்றுக்கொண்டதாக தெரிகின்றது. தவெகவுக்கு ஆதரவாக பேசினால் அக்கட்சி கூட்டணிக்கு வந்துவிடும் என கனவு காண்கின்றார். அமமுக எந்த கூட்டணியில் இடம் பெறும் என டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும். எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து அரசியல் செய்கிறார். எங்கள் கூட்டணிக்கு ஒரு பிரம்மாண்ட கட்சி வரும் என எடப்பாடி பழனிசாமி கூறுகின்றார். தன் கட்சி தொண்டர் கையிலேயே இன்னொரு கட்சியின் கொடியை கொடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாராலும் நினைத்து பார்க்க முடியாத கூட்டணி அமமுக அமைக்கும்” எனக் கூறினார்.


