“விஜய் வந்தால் பாஜகவை ஈபிஎஸ் கழட்டிவிடுவார்”- டிடிவி தினகரன்
தருமபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அமமுக கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். தாங்கள் கூட்டணி இடம் பெறும் தலைவர்களுக்கும் தெரியும். இதில் உறுதியான எங்கள் கூட்டணியில் இடம் பெறும் தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். வருகிற தேர்தலில் அமமுக தவிர்க்க முடியாத சக்தியாக வரும். 2026 தேர்தலில் துரோகத்தை வீழ்த்த வேண்டும். தனது கட்சித் தொண்டர்கள் கையில் மாற்றுக் கட்சி கொடியை கொடுத்து கூட்டணிக்கு வர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி ஏமாற்றி வருகிறார்.
முறைகேடு ஊழலில் மாட்டி வழக்குகளில் சிக்கியவர் கொடநாடு வழக்கில் சிக்கியவர் பழனிச்சாமி. கரூர் சம்பவத்தால் விஜய் மற்றும் தொண்டர்கள் தமிழ்நாடு துக்கத்தில் உள்ளது. அண்ணா திமுக தொண்டர்கள் வைத்து கொடி பிடிக்க வைத்தவர் என்பது ஊடகங்களை வெளியாகி உள்ளது. பிள்ளையார் சுழி போட்டதாக பழனிச்சாமி சொல்லி யாரையோ ஏமாற்றுகிறார். பாஜாவுக்கு துரோகம் செய்துவிட்டு கட்சி காப்பாற்றிக் கொண்ட பழனிச்சாமி விஜய் வந்தால் பாஜகவை கழட்டி விடுவார். 2024 தேர்தலிலே பாஜகவை பற்றி என்ன பேசினார்... பாஜக ஆட்சிக்கு வர முடியாது என பேசிவிட்டு இன்று பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைத்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு முன் விஜய் முதலமைச்சர் என்றார், விஜய் வந்த பிறகு மாற்றம் வரும் என்றார். இப்போது பழனிச்சாமி அதிமுக பழவீனமாக உள்ளது.
கரூர் சம்பவத்துக்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும், அவர்களின் செயல்பாடு பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழக முழுவதும் பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை தூக்கி வைத்துக் கொண்டு செல்லுகிறார். அவரை இறக்கி விட்டு சென்றால் இன்னும் வேகமாக இருக்கும் நாயனார் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்றார்.


