விஜய்யை கைது செய்யவேண்டுமென்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை- டிடிவி தினகரன்

 
ttv

கரூர் 41 பேர் பலியான கோர  சம்பவத்தில்   தமிழக முதல்வரின்  செயல்பாடு மிகச்சிறப்பாக இருந்தது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பாராட்டு  தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கரூர் கோர சம்பவத்தில் தமிழக அரசு விஜயை கைது செய்யாதது நிதானமான போக்கு,   முதல்வருக்கு விஜயை கைது செய்ய வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை. கரூர் விபத்தில் சதி யெல்லாம் இல்லை. விஜயை உடன் இருக்கும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டவர்கள் தவறாக கையாள்கிறார்கள். தவெக விஜயை தவறாக கையாள்கிறார்கள். விஜயை சுற்றியிருப்பவர்களுக்கு அரசியல் புரியவில்லை. விஜயை கைது செய்யாதது தமிழக அரசின் நிதானமான போக்கு.

முதல்வருக்கு விஜயை கைது செய்ய வேண்டும் என்கிற  எண்ணமெல்லாம் இல்லை. சதி ஏதும் இல்லை. பா.ஜ.க அண்ணாமலை பேசியது சரியில்லை எடப்பாடி பழனிசாமி இந்த துயரமான சம்பவத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்" என்றார்.