"மோடியை சந்திக்க நான் நேரம் கேட்கவே இல்லை"- டிடிவி தினகரன்
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை சந்திக்க நான் நேரம் கேட்கவே இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “வருகிற செப்டம்பர் 4-ந் தேதி மதுரையில் ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டில் உறுதியாக பங்கேற்கவுள்ளேன். ஓபிஎஸ் - உடன் இணைந்து தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் நான் கேட்கவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் பிரச்சார பயணம் நடைபெறும்.
அதிமுகவில் டிடிவி தினகரன் - ஐ இணைப்பதற்கு , காலம் பதில் சொல்லும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதற்கு உரிய நேரம் வரும் அப்பொழுது நேரம் பதில் சொல்லாது, நான் பதில் சொல்வேன். 6 மாத காலம் பொறுத்திருங்கள்,நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் நடைபெறும். சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக அன் கண்டிஷனல் சப்போர்ட்டாக செயல்படுகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அங்கம் வகிக்கும்.அமித்ஷா என்ன கூறினாரோ? அதைத்தான் நானும் கூறுகிறேன். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான்” என்றார்.

