“பங்காளி சண்டைகளை எல்லாம் தாண்டி திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே குறிக்கோள்”- டிடிவி தினகரன்

 
ச் ச்

தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் அடைவதை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியக்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் அடைவதை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அச்சம். அதிமுகவில் தற்போது தமது ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர். நம்மிடையே உள்ள பங்காளி சண்டைகளை எல்லாம் தாண்டி திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோள். அதிமுக தலைமையில் NDA போட்டியிடும் என அமித்ஷாவே கூறிவிட்டார். திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்களது கூட்டணிக்கு வருவார்கள். NDA கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வருவார்கள். தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.  1999ல் திமுக அதாவது கருணாநிதி எப்படி  பாஜகவிடம் கூட்டணி வைத்ததோ அதுபோல் என்.டி.ஏ கூட்டணி வைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வலிமை பெற்று வருவதால் ஸ்டாலின் விமர்சிக்கிறார்.

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகிறார். இலைக்கு மேல் பூ மலர்வது தான் இயற்கை அதனை உவமையாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. திமுக ஆட்சி வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் தங்கள் கூட்டணிக்கு வருவார்கள். அதனை பொறுத்திருந்து பார்க்கலாம். தங்களுக்கு அதிமுகவிற்கும் இருப்பது பங்காளி சண்டை. அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஓபிஎஸ் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்.” என்றார்.