மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பதால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி- டிடிவி தினகரன்

 
  டிடிவி தினகரன்

2026-க்கு பிறகு அதிமுகவிற்கு பழனிசாமி முடிவுரை எழுதிவிடுவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அதிமுகவில் உள்ள தொண்டர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை உள்ளது என ஈபிஎஸ்க்கு காவடி தூக்கினால் 2026 தேர்தலுக்கு பிறகு அவர் கட்சிக்கு முடிவுரை எழுதிவிடுவார் என பலமுறை கூறியுள்ளேன். திமுகவிற்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட இரட்டை இலை, இன்றைக்கு மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அவர்களது வெற்றிக்கு இரட்டை இலை  பயன்படுவது வருத்தமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தி.மு.கவுடன் கள்ளக் கூட்டணி அமைத்துள்ளார். 

வி.சி.க.,வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். மது ஒழிப்பு தமிழ்நாட்டுக்கு தேவை. மது ஒழிப்பு மாநாட்டிற்கு எங்களுக்கு அழைப்பு இல்லை. ஆகவே அதில் கலந்துகொள்ளவில்லை. துணை முதலமைச்சர் நியமனத்தில் ஏன் இவ்வளவு அவசரம்? விமர்சனம் வரும் அளவிற்கு எதுக்கு உதயநிதிக்கு அந்த பதவியை கொடுக்க வேண்டும். உதயநிதியால் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை. 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சி இருக்குமோ இல்லையோ என்ற பயத்தில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.