“இபிஎஸ் முதல்வராக வேண்டும் என்பதால் தான் நான் தேர்தலில் நிற்கவில்லை”- டிடிவி தினகரன்
நானும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ஒரே வேனில் நின்று பிரச்சாரம் செய்வதால் சில பேர் பயத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.. அவர்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், இது அண்ணன் தம்பி சண்டை தான்.. என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
திருச்சி மேற்கு தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் ராஜசேகரனை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உறையூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நாம் மக்களை நம்பி நிற்கிறோம்.கூட்டணியை நம்பி நிற்கிறோம். ஆனால் நம்மை எதிர்த்து நிற்பவர்கள் காந்தியை(பணம்) நம்பி நிற்கிறார்கள். உப்பை திண்றவர்கள் தண்ணீர் குடிக்க போகிறார்கள். தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை. தமிழ்நாட்டில் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. அதை திமுக தனது சைடு பிஸ்னஸாக செய்கிறது. மூன்றாவது மொழியை படிக்க சொன்னால் இந்தியை திணிக்கிறார்கள் என முதல்வர் கூறுகிறார். வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு விவசாய வேலை பார்க்க வருகிறார்கள். தமிழ்நாட்டில் பள்ளி கல்வி துறை பாழாய்போன துறையாகி விட்டது. பள்ளிகளில் கஞ்சா விற்கப்படுகிறது. மாணவர்களிடம் ஜாதி சண்டை உருவாகி உள்ளது. திமுக அமைச்சர்கள் சமூக விரோதிகளோடு தான் தொடர்பு வைத்துள்ளார்கள்.
திமுக கொள்கை கூட்டணி அல்ல, அது கொள்ளை கூட்டணி. மோடியின் கூட்டணி தமிழ்நாட்டிற்கான திட்டங்களை எளிதில் பெற கூடிய கூட்டணி. தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. மோடியின் பெயரை சொல்லி இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தான் இஸ்லாமியர்கள் நிம்மதியாக இஃப்தார் நோன்பு துறந்தார்கள். ஈரான் இந்தியாவை நட்பு நாடாக பார்க்கிறது. மோடி ஆட்சி செய்யும் இந்தியாவில் தான் இஃப்தார் நோன்பை நிம்மதியாக துறந்தார்கள். சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மினி மினி பூச்சிகளை பார்த்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம். இ.பி.எஸ் நாங்களும் அண்ணன் தம்பி நாங்கள் சண்டை போட்டுக்கொண்டோம். மோடி, அமித்ஷா தான் திமுக வை வீழ்த்த எங்களை ஒன்றாக இருக்க சொன்னார்கள், நாங்கள் ஒன்று சேர்ந்தோம். எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக வர வேண்டும் என்பதற்காக தான் நான் தேர்தலில் நிற்கவில்லை, இது தியாகம் அல்ல நாடு நன்றாக இருக்க விட்டுக்கொடுத்துள்ளேன். திமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் அல்ல டம்மி ஸ்டார்... மோடி ஆட்சி செய்யும் இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக நோன்பு கூட திறக்க முடித்தது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் படையில் சென்று கொண்டிருந்தவர்கள். நோன்பு திறக்க நேரமானதால் அவர்கள் பலகிலேயே நோன்பு திறந்தார்கள். அவர்களை உத்தர பிரதேச மாநில அரசு கைது செய்து ரம்ஜான் பண்டிகை கூட கொண்டாட விடாமல் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது” என்றார்.



