ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அதிமுகவை மீட்டெடுப்போம் - டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு!

 
ttv dhinakaran

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அம்மாவின் இயக்கமான அதிமுகவை மீட்டெடுப்போம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

மதுரை மேலூர் அருகே தெற்குதெருவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு அமமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து அந்த விழாவில் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:  தற்போது ஓ. பன்னீர்செல்வமும் நம்மோடு இணைந்துள்ளார். நாங்கள் இருவரும் இணைந்து அம்மாவின் இயக்கமான அதிமுகவை மீட்டெடுப்போம். 4 ஆண்டுகளாக பதவி வகித்த பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபபட்டு தி.மு.க. திருந்தி இருக்கும் என வாக்களித்தார்கள். ஆனால் நாங்கள் திருந்தவே மாட்டோம், எங்களுக்கு எதற்கு ஆட்சி பொறுப்பை கொடுத்தீர்கள் என மக்களை வாட்டி வதைத்து தண்டிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது. 

ஒரு குடும்பத்திடம் மட்டுமே ரூ. 30 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பதாக மதுரையை சேர்ந்த அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதனால் தான் அவரது துறை மாற்றப்பட்டிருக்கிறது. கொடநாடு கொள்ளை வழக்கில் அ.ம.மு.க. ஆட்சி அமைந்ததும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்.  இவ்வாறு டி.டி.வி. தினகரன் அந்த விழாவில் பேசினார்.