“டிஆர்பி ராஜா அழுதார்... இப்படி வருத்தப்படுவீர்கள் என தெரிந்திருந்தால் சீட்டே வேண்டாமென சொல்லி இருப்பேன்”- எம்.எல்.ஏ. காமராஜ்

 
ச்

மன்னார்குடி தொகுதியை டிஆர்பி ராஜாவுக்கு விட்டுத்தந்திருக்க வேண்டும் என எம்.எல்.ஏ காமராஜ்  பேசியிருப்பது வைரலாகிவருகிறது. 

அண்மையில் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. காமராஜ் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சில இடங்களில் பேசும்போது வருத்தப்பட்டு பேசினார்... மன்னார்குடியில் தோற்றநிலையில் தொகுதியில் நன்றி தெரிவிக்கும்போது டிஆர்பி ராஜா அழுதார். எனக்கே அது சங்கடமாக இருந்தது... இப்படி வருத்தப்படுவீர்கள் என தெரிந்திருந்தால் சீட்டே வேண்டாமென சொல்லி இருப்பேன் என்று அவரிடம் கூறினேன். மன்னார்குடி தொகுதியை டிஆர்பி ராஜாவுக்கு விட்டுத்தந்திருக்க வேண்டும். மன்னார்குடி மண்ணுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தவர் ராஜா” என புகழ்ந்து பேசினார்.