ஜூன் 7-ம் தேதி அமமுக செயற்குழு கூட்டம்

 
TTV

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் வரும் ஜீன் 7 ஆம் தேதி சென்னை தலைமை கழகத்தில் நடைபெறுவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Image
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 07.06.2023 புதன் கிழமை அன்று காலை 09.00 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இருவரும் சேர்ந்து அதிமுகவை மீட்டெடுப்பதாக கூறினர். தொண்டர்களை ஒன்றிணைக்க மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த சூழலில் அமமுக செயற்குழு கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவு அளிப்பது, மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.