பாஜக கூட்டணியில் அமமுக? - விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

 
ammk

பாஜக - அமமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்த வரையில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், மாற்று கூட்டணியை அமைக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் அதிமுகவை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க பாஜக திட்டம் தீட்டி வருகிறது. அமமுக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தங்களது கூட்டணியில் சேர்க்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 

bjp

இந்த நிலையில், பாஜக - அமமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 22 தொகுதிகள் அடங்கிய விருப்பபட்டியலை பாஜக மத்திய தலைமைக்கு அமமுக அனுப்பியதாக கூறப்படுகிறது. 11 முதல் 15 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என பாஜக மத்திய தலைமை பதில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடமிருந்தும் தொகுதிப் பட்டியலை பாஜக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, வரும் 11-ஆம் தேதி சென்னை வரும்போது கூட்டணி குறித்து பேசப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.