அண்ணா பிறந்தநாளையொட்டி அமமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் - கட்சி தலைமை அறிவிப்பு

 
ammk

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழாவையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் நடைபெறுகிறது: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்கள். நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், தமிழகத்தில் ஜனநாயக புரட்சிக்கு வித்திட்ட ஒப்பற்ற தலைவர், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று போதித்த அறிவுலக ஆசான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழா வரும் 15.09.2023 வெள்ளிக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்றைய தினம்(15.09.2023) மாலை 4.00 மணியளவில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சி பேரூரையாற்றவுள்ளார்.


கழக மாவட்டங்கள் வாரியாக செப்டம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் கீழ்காணும் விவரப்படி நடைபெற உள்ளன. பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட கழக செயலாளர்களுடன், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகத்திற்குட்பட்ட அனைத்து நிலையிலான நிர்வாகிகளும் இணைந்து சிறப்போடு நடத்தி அது தொடர்பான செய்திகளையும், புகைப்படங்களையும் தலைமைக்கழகத்திற்கு வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.