திமுகவின் ஒரு தலைவருக்குக்கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது- அமித்ஷா

திமுகவின் ஒரு தலைவருக்குக்கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற 'ரைசிங் பாரத்' மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “வக்பு சட்டம் தங்களுக்கு அநீதி இழைப்பதாக இஸ்லாமியர்கள் நினைக்கவில்லை. வேறு சிலர் அவ்வாறு நினைக்கிறார்கள். வக்பு மசோதா மீது நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி வாக்களிக்கவில்லை. ராகுல் பேசவில்லை. மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாக தான் பார்க்கிறது. இந்தியை மட்டும் ஊக்குவிக்க நினைக்கவில்லை. திமுகவின் ஒரு தலைவருக்குக்கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது. மீண்டும் மீண்டும் கூறுகிறேன், தமிழ்நாட்டில் நாங்கள் வெல்வோம். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென் மாநில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே இது நடக்கிறது, ஏனென்றால் தமிழ்நாட்டில் தேர்தல் வருகிறது.
பிரிவினையை விரும்பியவர்கள் காங்கிரஸ் அரசியல்வாதிகள் தான், சாமானிய இஸ்லாமியர்கள் அல்ல. பிரதமர் சரியாகத்தான் கூறியுள்ளார். தற்போது காங்கிரஸ் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது” எனக் கூறினார்.