"ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் இந்த நாட்டிற்காகவே உழைத்து வரக்கூடிய மாமனிதர் பிரதமர் மோடி"- அமித்ஷா
திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் விவகாரத்தில் நீதிபதியை பதவிநீக்கக் கோரி சமர்பிக்கப்பட்ட தீர்மான கடிதம் அர்த்தமற்றது என மக்களவையில் அமித்ஷா கூறினார்.

மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்எஸ்எஸ் காரர் தான். ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது என எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். ஏன் இந்தியாவின் சட்டத்தில் ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு எந்த பதவியும் கொடுக்கக் கூடாது என இருக்கிறதா? நாங்கள் வாக்குத்திருட்டியில் ஈடுபட்டு ஜெயிப்பதாக இவர்கள் கூறுகிறார்கள். ராமர் கோவில் கட்டியதை எதிர்த்தீர்கள், அதனால் நாங்கள் ஜெயித்தோம். பிரிவு 370 ரத்து செய்ததை எதிர்த்தீர்கள், அதனால் நாங்கள் ஜெயித்தோம். ஆப்ரேஷன் சிந்துரை எதிர்த்தீர்கள், அதனால் நாங்கள் ஜெயித்தோம். ஏர் ஸ்ட்ரக் செய்ததை எதிர்த்தீர்கள், அதனால் நாங்கள் ஜெயித்தோம். முத்தலாக்கை நாங்கள் தடை செய்தோம். அதை நீங்கள் எதிர்த்தீர்கள், அதனால் நாங்கள் ஜெயித்தோம். சிஏஏவை எதிர்த்தீர்கள், அதனால் நாங்கள் ஜெயித்தோம். ஒரு நாடு ஒரு தேர்தலை நீங்கள் எதிர்த்தால் நாங்கள் மீண்டும் ஜெயிப்போம்.
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஏன் சோனியா காந்தி கூட இந்த அவையில் பேசி இருக்கிறார்கள். அதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், நேரிலும் பார்த்து இருக்கிறேன். ஆனால் ராகுல் காந்தி போல இப்படி விவாதத்திற்கு பயந்து ஓடக்கூடியவர்கள் யாரும் இல்லை. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை எப்படி நடத்த வேண்டும் என்று கூட தெரியவில்லை. எனக்கு பல தசாப்தங்களாக பிரதமர் நரேந்திர மோடியை தெரியும். 2001 ஆம் ஆண்டிலிருந்து அவருடன் நான் நெருங்கி இருக்கிறேன், ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் இந்த நாட்டிற்காகவே உழைத்து வரக்கூடிய மாமனிதர் அவர். 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது
அந்த தேர்தலில் முழுக்க முழுக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்பட்டது. அப்படி என்றால் அந்த தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் செய்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதா? நாங்கள் 2014 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற போது மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேகத்தை காங்கிரஸ் கட்சி எழுப்புவது ஏன்? திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் விவகாரத்தில் நீதிபதியை பதவிநீக்கக் கோரி சமர்பிக்கப்பட்ட தீர்மான கடிதம் அர்த்தமற்றது
தங்களது வாக்கு வங்கியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மாண்புமிகு நீதிபதிக்கு எதிராகவே இவர்கள் தகுதி நீக்க நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதில் எதிர்க்கட்சிகள் அனைவரும் கையொப்பம் போட்டிருக்கிறார்கள்” என்றார்.


