“குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீர வேண்டும்! ஸ்டாலின் கனவு நிறைவேறாது”- அமித்ஷா

 
அமித்ஷா அமித்ஷா

எப்பாடு பட்டாவது தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் ஆட்சியை அகற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயண நிறைவு விழாவில் உரையாற்றிய பாஜக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியாதமைக்காக மன்னிப்பு கோருகிறேன். தமிழ்நாட்டின் புனிதமான மண்ணுக்கு என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதுக்கோட்டை சோழ சாம்ராஜ்யத்தின் பூமி. தேஜ கூட்டணி அரசு அமைக்கப்பட வேண்டாமா? மோடி தலைமையின்கீழ் அரசு அமைக்கட வேண்டாமா? வரும் ஏப்ரலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி மலரும். பிரதமர் மோடி தலைமையில் அணிவகுக்க தமிழக மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இனிவரும் நாட்களில் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும். எப்பாடு பட்டாவது தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் ஆட்சியை அகற்ற வேண்டும். 

எப்படியாவது திமுக கூட்டணி ஆட்சியை நாம் ஒழித்தே தீருவோம். முடிவு கட்டியே தீருவோம். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் மிக குறைவானவற்றையே திமுக நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. அரசின் ஒரே நோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதுதான். உதயநிதியை முதலமைச்சராக்கும் மு.க.ஸ்டாலினின் கனவு நிறைவேறாது. ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீர வேண்டும், அதற்கு நேரம் வந்துவிட்டது. அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி. 1998 மற்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் அதிமுக- பாஜக ஒன்றாக இணைந்து களம் கண்டது. 2024 மக்களவை தேர்தலில் அதிமுக- பாஜக இணைந்து போட்டியிட்டுருந்தால் 26 தொகுதிகளை கைப்பற்றியிருப்போம்” என்றார்.