சென்னை வந்தடைந்தார் அமித்ஷா! அண்ணாமலையுடன் ஒரே காரில் பயணம்
Jan 31, 2025, 21:08 IST1738337897201
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷ, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஒரே காரில் பயணித்தார்.

முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள சென்னை வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரே காரில் பயணம் செய்தார். பாதுகாப்பு விதிமுறைகளை தளர்த்தி அமித்ஷா தன்னுடைய காரின் முன் இருக்கையில் அண்ணாமலையை அமர்த்தியிருந்தார்.
முன்னதாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவை பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

