தமிழிசை வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அமித் ஷா!

 
tamilisai

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை இல்லத்திற்கு சென்று அவரது தந்தையின் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்தார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ளார். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமித் ஷா சென்னை வந்துள்ளார். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை இல்லத்திற்கு வருகை தந்தார். குமரி அனந்தன் மறைவுக்கு அவரது மகள் தமிழிசையை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அமித் ஷா சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தந்தையின் மறைவுக்கு நேரில் ஆறுதல் கூறினார் அமித்ஷா. தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஆறுதல் கூறியிருந்தார் அமித்ஷா என கூறினார்.