நாளை சென்னை வருகிறார் அமித்ஷா
Updated: Apr 9, 2025, 15:22 IST1744192376854

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக நாளை (ஏப்.10) சென்னை வருகிறார். நாளை இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் அமித்ஷா, ITC கிராண்ட் சோலா ஹோட்டலில் தங்குகிறார். நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை அமித்ஷா சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2026 தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், அமித்ஷா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.