ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா தீவிர ஆலோசனை

 
ச்

முக்கிய ஆலோசனை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அமித்ஷா உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சென்றுள்ளார்.

சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி உடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமார் ஒன்றரை மணி நேரமாக தனியாக ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். புதிய தலைவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோருடனும் அமித்ஷா, குருமூர்த்தி ஆலோசனை செய்துவருகிறார்.

Image

நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குருமூர்த்தியுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று மாலைதான் குருமூர்த்தி வீட்டிற்கு அமித்ஷா செல்வார் எனக் கூறப்பட்டது. ஆனால் முன்கூட்டியே அமித்ஷா குருமூர்த்தியுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.