அமித்ஷா- ஈபிஎஸ் 7 மணிக்கு சந்திப்பு எனத் தகவல்

மத்திய உள்துறை அமித்ஷாவை இன்று இரவு 7 மணிக்கு அவரது இல்லத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார். மேலும் அவரை தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி ஆகியோர் டெல்லி சென்றனர். அவர்கள் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமித்ஷாவை இன்று இரவு 7 மணிக்கு அவரது இல்லத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைவரும் சந்திப்பை முடித்துவிட்டு நாளை பிற்பகல் 12 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை புறப்படுகிறார்கள்.