இன்று மதியம் 12ம் மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் அமித் ஷா!

 
amit shah

தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சந்திக்கிறார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இந்த தமிழக வருகையின் போது கூட்டணி குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, தமிழக பாஜக புதிய தலைவர் நியமனத்திற்கும் அமித்ஷா வருகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் மற்றும் கூட்டணி தொடர்பாகன பயணமாகவே  அமித்ஷா வருகையை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அமித் ஷா சென்னை வருகிறார் எனக் கூறினார்.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சந்திக்கிறார். இதேபோல் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்களை அமித் ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அமித் ஷா இன்று மதியம் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது