இன்று அம்பானி வீட்டு திருமணம்..! ஊழியர்களுக்கு அம்பானி குடும்பம் அளித்த பிரம்மாண்ட பரிசு..!
Jul 12, 2024, 05:15 IST1720741556000
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் இன்று மும்பையில் நடைபெற உள்ளது. இதற்காக பல ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.இதுதான் தற்போது இந்தியாவின் ஹாட் டாப்பிக்காகவே மாறுமளவிற்கு கொண்டாட்டங்கள் பேசுபொருளாகியுள்ளது.
இதில் அம்பானி குடும்பத்தினர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் நகைகள் பெரிதும் கவனம் பெற்றது. மேலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரபலங்களின் ஆடைகள், புகைப்படங்கள் என அனைத்தும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த திருமணத்தையொட்டி, ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கிப்ஸ் பாக்ஸ் ஒன்று வைரலாகியுள்ளது.அந்த பாக்ஸில் உள்ள பொருட்களை ஊழியர்கள் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதில் இனிப்புகள், மிக்சர் வகைகள், வெள்ளி நாணயம் போன்றவை இடம்பெற்றுள்ளது.


