மொபைல் நம்பரால் அமரனுக்கு வந்த சோதனை...ரூ1.10 கோடி இழப்பீடு கோரும் இளைஞர்!

 
amaran

அமரன் திரைப்படத்தில் தனது மொபைல் என் ஒளிபரப்பப்பட்டதாக கூறி இளைஞர் ஒருவர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளார். 

சிவகார்த்திகேயம் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் வசூலை அள்ளி வருகிறது. இதனிடையே இந்த திரைப்படத்தில் முஸ்லீம்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூற முஸ்லீம் அமைப்புகள் மற்றும் சில கட்சிகள் போராட்டங்களை நடத்தினர். இதனால் ஒரு சில திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், அமரன் திரைப்படத்தில் தனது மொபைல் என் ஒளிபரப்பப்பட்டதாக கூறி இளைஞர் ஒருவர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளார். அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி தோன்று காட்சியில் ஒரு மொபைல் எண் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அந்த நம்பருக்கு சொந்தமான இளைஞர் ஒருவர் பட நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளார். தனது நம்பர் திரைப்படத்தில் திரையிடப்பட்டதால் அடிக்கடி தனக்கு அழைப்பு வருவதாகவும், இதனால் தூக்கமின்றி அவதிப்படுவதாகவும் பொறியியல் மாணவர் வாகீசன் இழப்பீடு கேட்டுள்ளார்.