பாஜகவிலிருந்து அமர் பிரசாத் விலகல்! "இனி அண்ணாமலை VS விஜய் தான்"

 
ச்

பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “2013ஆம் ஆண்டு மோடி மீதான ஈர்ப்பு காரணமாக நான் பாஜகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தேன். எனக்கு பிடித்துதான் பாஜகவில் இணைந்தேன். 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து கட்சி பணிகளையும் செய்தேன். அண்ணாமலை அவர்கள் மாநில தலைவராக வந்த பிறகு எந்த கட்சியிலும் இல்லாத பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவை உருவாக்கி, எனக்கு கொடுத்தார். இதன்மூலம் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களை ஃபீல்டுக்குள் கொண்டுவந்தேன். இதனை பார்த்து திமுகவும் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவை உருவாக்கியது.


என் மண் என் மக்கள் யாத்திரையையும் சிறப்பாக செய்தேன். இந்த யாத்திரைதான் கிராமங்களுக்கும் பாஜகவை கொண்டுவந்தது. 25 நாட்கள் சிறையில் இருந்தேன். யாத்திரையின்போது ஒரு வழக்கு, மோடிக்காக ஒரு வழக்கு, கட்சி கொடி ஏற்றியதற்காக ஒரு வழக்கு என் மீது உள்ளது. தனிப்பட்ட முறையில் என் மீது எந்த வழக்கும் இல்லை. பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசைக்கு ஆளுநர் பதவி கொடுத்து கெளரவித்தனர். பின் மாநில தலைவராக இருந்த எல்.முருகனுக்கும் மத்திய இணையமைச்சர் வழங்கபட்டது. அதன்பின் வந்த அண்ணாமலை 3% இருந்த கட்சி வளர்ச்சியை 12 சதவீதமாக மாற்றினார். இதுதான் சுயநலம்... ஒரு கூட்டணிக்காக ஒரே இரவில், 12 மணிநேரத்தில் அண்ணாமலை அந்த பதவியிலிருந்து தூக்கப்பட்டார். 3% வளர்ச்சியை கொண்டு வந்தவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்த பாஜக, 12% அளவுக்கு தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்த அண்ணாமலைக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து இரு இளைய ரத்தம், அறிவாளியானவர் வருவது சிலருக்கு பிடிக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். இதுதான் முக்கியமான காரணம். தமிழக பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் திமுக குடும்ப கட்சி என சொல்கிறேன். பாஜகவிலும் 4,5 பேர் பிடியில்தான் கட்சி இருக்கிறது. தோற்றாலும் பரவாயில்லை, மீண்டும் மீண்டும் அவர்களுக்குதான் சீட் கொடுக்க வேண்டுமென சொல்கிரார்கள். கட்சிக்காக சொந்த காசை செலவு செய்தவர்களுக்கு கட்சி என்ன செய்தது?அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் தான் இணையவுள்ளேன். வருங்காலம் என்பது விஜய்- அண்ணாமலை இடையேதான் போட்டி இருக்கும்” என்றார்.