வருத்தத்தில் இருக்கிறேனா? யார் சொன்னது? - ராஜபாளையம் தொகுதி விவகாரத்தில் கௌதமி கொடுத்த 'பளீச்' பதில்..!
நடிகையும் அதிமுக பிரமுகருமான கௌதமி அதிமுக கூட்டணியில் தமமுகவுக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்ததாகவும், கௌதமிக்கு ராஜபாளையம் தொகுதியை ஒதுக்குவதாக எடப்பாடி வாக்குறுதி அளித்திருந்ததாகவும் தகவல் வெளியானது. ராஜபாளையத்தில் தமமுக தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து நடிகையும் அதிமுக பிரமுகருமான கௌதமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி ஒதுக்கீட்டில் நான் "*வருத்தத்தில் உள்ளேன்* என்பது போன்ற செய்தி என் கவனத்திற்கு வந்துள்ளது. இது ஒரு *வதந்தி* மட்டுமே என்று நான் திட்டவட்டமாக கூறுகிறேன், இந்த தேர்தல் நேரத்திலும் ஒருசில நபர்கள் உண்மையிலேயே வேலையில்லாமல் உள்ளனர் என்ற முடிவுக்கு மட்டுமே வர முடியும். மிகவும் அவசியமான ஆட்சி மாற்றத்தை கொண்டு வர இந்த தேர்தலில் செயல்படுகளிலேயே எனது முழு கவனமும் உள்ளது மற்றும் எமது பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் அண்ணன் எடப்பாடியார் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தமிழகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என பதிவிட்டுள்ளார்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி ஒதுக்கீட்டில் நான் "*வருத்தத்தில் உள்ளேன்* என்பது போன்ற செய்தி என் கவனத்திற்கு வந்துள்ளது. இது ஒரு *வதந்தி* மட்டுமே என்று நான் திட்டவட்டமாக கூறுகிறேன், இந்த தேர்தல் நேரத்திலும் ஒருசில நபர்கள் உண்மையிலேயே வேலையில்லாமல் உள்ளனர் என்ற…
— Gautami Tadimalla (@gautamitads) March 26, 2026

