பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி., மநீம முக்கிய நிர்வாகி!!

 
tn

அதிமுக முன்னாள் எம்.பி.,விஜயகுமார், மநீம கொள்கைப்பரப்பு செயலாளர் அனுஷா ரவி ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். 

annamalai
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்  தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறது. அதே சமயம் பாஜக தலைமையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.  இந்த சூழலில் மாற்று கட்சியினர் பலர் தொடர்ந்து பாஜகவில் தங்களை இணைத்து வருகின்றனர்.

tn

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய அனுஷா ரவி பாஜகவில் இணைந்தார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கம் பாஜகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்.பி., விஜயகுமார் பாஜகவில் இணைந்தார். சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். முன்னதாக சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்தது குறிப்பிடத்தக்கது