ஜெ மரணத்தில் மர்மம் எனில் காரணம் யார்? பிரதமருக்கு எம்எல்ஏ கேள்வி

 
modi jayalalitha

ஒரு முதலமைச்சருக்கு என்ன நடந்தது என்பது ஒரு பிரதமருக்கு தெரியாதா? ஜெ மரணத்தில் மர்மம் எனில் காரணம் யார்? என எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனிச்சின்னத்தில்தான் போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறோம்!” - விசிக ஆளூர்  ஷா நவாஸ் |`Vck Aloor Shah Nawaz says their party has upset on congress -  Vikatan

ஒடிசாவில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, “ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை சீர்குலைந்து வருவதற்கு பின்னால் சதி இருக்கலாம். கடந்த ஓராண்டாக நவீன் பட்நாயக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். திரை மறைவில் அதிகாரத்தை ருசித்து வரும் சிலரது லாபி இதில் அடங்கி இருக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது. ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை சீர்குலைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்” எனக் கூறினார்.


இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி! - மோடி

முதலில் ஜெயலலிதா உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி என்று தர்ம யுத்தம் நடைபெற்றதே அதற்கு மோடி பதில் சொல்வாரா? ஒரு முதலமைச்சருக்கு என்ன நடந்தது என்பது ஒரு பிரதமருக்கு தெரியாதா? ஜெ மரணத்தில் மர்மம் எனில் காரணம் யார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.