அட்லீ அல்லு அர்ஜூனின் AA22 பட போஸ்டரும் காப்பியா..?

 
1

புஷ்பா 2 படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் AA22 என்ற படத்தில் நடிக்கிறார் அல்லு அர்ஜூன். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அல்லு அர்ஜூனின் 43ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதிகப்படியான VFX காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ வீடியோவில் VFX இயக்குநர்கள் பலர் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் இணைந்து தான் இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்த வீடியோ 6 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்த போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரை பார்க்கும் போது அது டிமோதி சலமெட் மற்றும் ஜெண்டயா ஆகியோரது நடிப்பில் வெளியான சைண்டிபிக் படமான டியூன் (Dune) படத்தின் போஸ்டரைப் போன்று இருப்பதாக ரசிகர்கள் பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

அந்த டியூன் பட போஸ்டரில் பாலைவனம், கதாபாத்திர அமைப்புகள் ஆகியவை எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதை பார்க்கலாம். காப்பி பேஸ்ட் கண்டெண்ட் அட்லீக்கு முதல் முறை அல்ல. இதற்கு முன் பல படங்களில் அட்லீ காப்பி பேஸ்ட் போஸ்டரைத் தான் வெளியிட்டுள்ளார். படமும் பல படங்களின் சாயல் என்று அவர் மீது விமர்சிக்கப்பட்டது.