கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

 
தேனியில் கனமழை.. கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு!

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நாளை (மே 27) முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவி

தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் முழுக்க கனமழை பெய்தது. மேலும் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி  மலைப் பகுதிகளான செலும்பு ஆறு  வனப்பகுதி, புலிக்கூடு வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, கல்லாறு வனப்பகுதி, சோத்துப்பாறை வனப்பகுதி  உள்ளிட்ட பகுதியிலும் மழை வெளுத்துவாங்கியது. இதனால் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நாளை (மே 27) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை முடிவடைந்துள்ளதால், கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதியளித்து பெரியகுளம் தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவித்துள்ளார்.