கட்டுமான நிறுவன பணிகளைத் தொடர தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அனுமதி!

 
tn

வழக்கம்போல் கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணிகளைத் தொடர தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அனுமதி அளித்துள்ளது.

tn

சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, எவ்வகையான திறந்தவெளி கட்டுமானப்  பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, மே மாத இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

tn
இந்நிலையில் தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணிகளைத் தொடர தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அனுமதி வழங்கியுள்ளது. மீண்டும் வெப்ப அலையின் பாதிப்பு தொடங்கி உச்சம் தொடும் வரை கட்டுமான பணிகளை வழக்கம்போல் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.