மரக்காணம் விஷச் சாராய வழக்கு - 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

 
tn

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். தமிழகம்  முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அத்துடன் இறந்தவர்களின் குடும்பத்தினரையும் , மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருபவர்களையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

tn

அத்துடன் தமிழகத்தில் கள்ளச்சாராயம் போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை அடியோடு ஒழிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் கள்ளச்சாராயம் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது குண்டூர் சட்டம் பாயும் என்றும் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடி போலீசாரால் விசாரணைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்குகள் கொலை வழக்கமாக மாற்றப்பட்டுள்ளது.


tn

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் விஷச் சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலிசார்க்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர்; இது தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 11 பேரை கைது செய்ய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.