#Breaking பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
Mar 20, 2024, 15:42 IST1710929553359
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/17cc5b93623703ac23a76e40ff0cdcec.jpg)
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாஜகவின் தலைமையகமான கமலாலயத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர் ஜிகே மூப்பனாரின் மகனும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜி கே வாசன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் கட்சி தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.
இந்நிலையில் அமமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையெழுத்திட்டுள்ளனர்.