விடுதி காப்பாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி - அரசாணை வெளியீடு!!

 
tn govt

விடுதி காப்பாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிப்பதற்கான நிதி ஒதுக்கி  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

stalin

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு கிடந்தன . இதனால்  மாணவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்யவும்,  கற்றலில் ஆர்வத்தை தூண்டவும் , புத்தாக்க பயிற்சி மட்டுமே அளிக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதன் பின்னர் முதன்மை படுத்தப்பட்ட பாடங்கள் நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வி துறை தெரிவித்திருந்தது. இதன் மூலம் ஆசிரியர்கள் ஒவ்வொரு படங்களிலும் கடினமான பகுதிகளில் எளிமையான செயல் விளக்கப் படங்களுடன் வகுப்புகள் நடத்த தயாராகினர். 

govt

இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள்/ காப்பாளினிகளுக்கு 3 நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள்/ காப்பாளினிகள் தங்கள் விடுதிகளை சிறப்பான முறையில் பராமரிப்பு செய்திடவும், விடுதியை திறம்பட நடத்திடவும்  விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் 3 நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்க ரூ.49.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.