பிலாஸ்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு: தரையிறங்கும்போது அலையன்ஸ் ஏர் விமானத்தின் டயர் வெடித்து விபத்து!
Aug 29, 2026, 07:10 IST1787967636000
தலைநகர் டில்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 37 பயணிகளும், 4 விமான பணியாளர்களும் இருந்தனர்.
விமானம் பிலாஸ்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக, இடதுபுறம் இருந்த டயர்களில் ஒன்று பஞ்சராகி திடீரென வெடித்தது. இருந்த போதிலும் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.37 பயணிகள், 4 விமான பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் ஓடுபாதையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.இந்த சம்பவத்தையடுத்து, பிலாஸ்பூரில் இருந்து டில்லிக்கு இயக்கப்படவிருந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் அறிவித்தது. விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

