திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்னும் சற்று நேரத்தில் கையெழுத்தாகிறது!

 
dmk

வருகிற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இன்னும் சற்று நேரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

congress

இந்த நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்னும் சற்று நேரத்தில் கையெழுத்தாகிறது. திமுக - காங்கிரஸ் இடையே நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம், அண்ணா அறிவாலயத்தில் சற்று நேரத்தில் கையெழுத்தாக உள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு சந்திக்கவுள்ளனர்.