நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை! திமுக அமைச்சர் தூண்டுதலின் பேரில் நடந்ததாக புகார்

 
கொலை

நாம் தமிழர் கட்சி தக்கலை ஒன்றிய தலைவர் சேவியகுமார் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும் மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை: பாதிரியார்கள், திமுக நிர்வாகி உள்பட 15 பேர் தலைமறைவு - பரபரப்பு தகவல்கள்

இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை தலைவர் சேவியர் பெலிக்ஸ்,கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கனிம வள கொள்ளை, நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிராக சேவியர் குமார் தொடர்ந்து போராடி வந்தார். இந்த நிலையில் பாதிரியார் ராபின்சன் அழைத்து வரச் சொன்னதாக கூறி ரமேஷ் என்பவர் சேவியரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தேவாலய வளாகத்திலேயே பாதிரியார் கண் கண் முன்னே சேவியர் குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் தூண்டுதலின் பேரிலேயே இந்த கொலை நடந்தது என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். எனவே அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்து அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் வைக்க வேண்டும்” என்றார்.