கைதான தமிழக மீனவர்கள் 17 பேருக்கும் வரும் 27ம் தேதி வரை சிறைக்காவல்

 
fishermen

தமிழக மீனவர்கள் 17 பேருக்கும் வருகின்ற 27ஆம் தேதி வரை சிறைக் காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

fishermen

இலங்கை நெடுந்தீவு கடல் எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மூன்று விசைப்படகையும் அதிலிருந்து 17 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்தை கொண்டு சென்று, பின்னர் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர். அங்கு வருகின்ற 27 ஆம் தேதி வரை 17 தமிழக மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களில் ஒரு விசைப்படகும் எட்டு மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்களும் இரண்டு விசைப்படகு 9 மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.