ரூ.100ல் நாள் முழுவதும் பயணம்- மெட்ரோ ரயில் சிறப்பு சலுகை

 
metro

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நாள் முழுவதும் பயணம் செய்ய ரூ.100 சிறப்பு டிக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

metro

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.

இந்நிலையில் ரூ.100ல் நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு சலுகையை சென்னை மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது. அதன்படி ஒருநாள் சுற்றுலா அட்டை கட்டணம் ரூ.150, அதில் வைப்புத்தொகை ரூ.50 திருப்பி ஒப்படைக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் சிறப்பு சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், சுற்றுலா அட்டை ஒருநாள் மட்டுமே செல்லும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அட்டையை ஒப்படைத்தவுடன் ரூ.50 வைப்புத்தொகை திருப்பி தரப்படும்.