"All Area-அண்ணன் கில்லிடா.."கோவையில் முதல்வர் விஜய்..! வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!
கோவை விமான நிலையம் TO காந்திபுரம் வரை 11.4 கி.மீ. தூரத்திற்கு முதலமைச்சர் விஜய் ரோடுஷோ. பிரசார வாகனத்தில் செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் உள்ளது.
பெரியார் நூலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய் கோவை விமானம் நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து அவர், அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 11.4 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். முதல்-அமைச்சர் செல்லும் வழியெங்கிலும் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
வேனில் நின்றபடி ரோட் ஷோ செல்லும் முதலமைச்சர் விஜய் வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு #CMVijay #Kovai #RoadShow #News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9 https://t.co/2gXiBRAga3
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 16, 2026