மக்களே அலெர்ட்..! நாளை முதல் இந்த மாற்றம் எல்லாம் வர போகுது..!

 
1

மே 1 ஆம் தேதி என்னென்ன மாற்றங்கள் வரும் என பார்க்கலாம்.

சிலிண்டர் விலை

பொதுவாக மாதத்தின் முதல் நாள் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கும். அந்த வகையில் மே மாதம் 1 ஆம் தேதி சிலிண்டர் விலை மாற இருக்கிறது. இந்த மாதம் தேர்தல் முடிந்து இருப்பதால் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

வங்கி விடுமுறை

மே மாதம் தொடங்கியதில் இருந்து 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

மின்மம் பேலன்ஸ்

யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச சராசரி இருப்பு மாற்றப்பட்டுள்ளது. அதாவது அக்கவுண்ட் ப்ரோ மேக்ஸில் குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.50,000 ஆக இருக்கும். அதே  போல அதிகபட்ச கட்டணத்திற்கு ரூ.1,000 வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் FD திட்டம்

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டத்தில் முதலீடு செய்ய கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நிலையில், இதில் முதலீடு செய்ய கடைசி தேதி 2024 மே 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேவை கட்டணம்

ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு குறித்த சேவை கணக்கு விதிகளை மாற்றி இருக்கிறது. புதிய விதிகளின் படி, டெபிட் கார்டுக்கு வாடிக்கையாளர்கள் ஆண்டுக் கட்டணமாக நகர்ப்புறங்களில் ரூ.200 மற்றும் கிராமப்புறங்களில் ரூ.99 செலுத்த வேண்டும்.

(IMPS Outward): ரூ.1,000 வரையிலான ஒரு பணப் பரிவர்த்தனைக்கு ரூ.2.50 சேவை கட்டணமும், ரூ.1,001 முதல் ரூ.25,000 வரையிலான ஒரு பணப் பரிவர்த்தனைக்கு ரூ.5 சேவை கட்டணமும் மற்றும் ரூ.25,000 முதல் ரூ.45 லட்சம் வரையிலான ஒரு பணப் பரிவர்த்தனைக்கு ரூ.15 சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்.