பார்களில் மது விற்கக்கூடாது - தமிழக அரசு

 
பார்களில் மது விற்கக்கூடாது - தமிழக அரசு

பார்களில் மது விற்கக் கூடாது என டாஸ்மாக் பார்களுக்குத் தமிழக அரசு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மதுபான பார்களில் கூடுதல் விலைக்கு நொறுக்குத் தீனிகளை விற்பனை செய்யக்கூடாது, பார்களில் மது விற்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தில் மட்டுமே பார்களும் இயங்க வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபட்டால் பார்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. பீடி, சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பார்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர், குளிர்பானங்கள் அனைத்தும் தரச்சான்று பெற்றவையாக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுக்கடைகள் செயல்படும் நேரத்தில் மட்டுமே மதுபான பார்கள் செயல்பட வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. மற்ற நேரங்களில் மதுபான பார்கள் செயல்படக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.